கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டமன்றத்தில் பட்ெஜட் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசும்போது மேகதாது அணை கட்டுவது உறுதி. இதற்காக தேவையான நிதி ஒதுக்கப்படும். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு எதிராக எதையாவது பேசினால் தான் அங்கு ஓட்டு கிடைக்கும் என்ற நிலை உள்ளதால் பசவராஜ் பொம்மை இந்த கருத்தை வெளியிட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.