கர்நாடக மாநில பட்ஜெட் தொடருக்கான சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்கியது. நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் மேகதாது அணை குறித்து அவர் கூறியதாவது:
மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஆயத்த பணிகளும், தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் கட்டுமான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீர் தடுத்து நிறுத்தப்படும். எனவே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசு இப்போதே தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் தருவதில்லை. மேகதாது கட்டப்பட்டால் தமிழகத்தில் காவிரி டெல்டா வறண்டு போகும் ஆபத்து உள்ளது.