திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கிடையிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
காரைக்குடி கம்பன் கழகத்தின் மீரா மகளிர் கல்லூரி கிளை ஏற்று நடத்திய இந்நிகழ்ச்சிக்கு மீரா மகளிர் கல்லூரி செயலர் எம்.ஆர்.கமல்பாபு தலைமை ஏற்றார்.
கல்லூரி முதல்வர் மேஜர் முனைவர் விஜி முன்னிலை வகித்தார்.
அரியலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக தலைவர் முனைவர் மு முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்
இதில் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பள்ளிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்புவித்தனர்.
எம்.ஆர் பொறியியல் கல்லூரி நூலகர் குமாரமணி , மீரா மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர் சத்தியா மற்றும் ராஜகுமாரி ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்ட சிறப்பாக ஒப்புவித்த மாணவிகளை தேர்ந்தெடுத்தனர்.
முன்னதாக பேராசிரியர் அபிராமி வரவேற்றார், இறுதியில் பேராசிரியர் கோகிலா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை பேராசிரியர் சுகுணா தலைமையில் மாணவிகள் சுவாதி, லட்சுமி தேவி உள்ளிட்ட மாணவிகள் செய்திருந்தனர்.