அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்சி எஸ்டி பிரிவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பிற்படுத்தப்பட்ட
நலத்துறை டெபுட்டி கலெக்டர் விஜயபாஸ்கர் மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
மீரா மகளிர் கல்லூரி தாளாளர் எம்.ஆர்.கமல் பாபு முன்னிலை வகித்தார். டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். ஏ.டி.எஸ்.பி ஆண்டனி ஹரி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் மேஜர். விஜி வரவேற்றார். இறுதியில் என் எஸ் எஸ் அலுவலர் உஷாராணி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போக்குவரத்து காவலர் பிரிவு ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவி சிறப்பாக செய்திருந்தனர்.