கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடக்கிறது. இதில் மேயர் வேட்பாளராக 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டார். மேயர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து மேயர் வேட்பாளர் தேர்வு கூட்டத்துக்கு வந்திருந்த 46வது வார்டு திமுக கவுன்சிலர் மீனா லோகு,
இதனால் அதிர்ச்சி அடைந்தார். ரங்கநாயகி பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், மீனா லோகு கண் கலங்கிய நிலையில் காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.