தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான 4ம் ஆண்டு தேர்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் பழமையான நெல்லை அரசு மருத்துவ கல்லூரி தான் கடைசி இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரியில் 205 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 111 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 55% தேர்ச்சி ஆகும். மருத்துவ கல்லூரியில் ஒரு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தொடர்ந்து அடுத்த ஆண்டில் படிக்க முடியாது. அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் அடுத்த ஆண்டு தான் அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும்.
