நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதன் மூலம் பல முறை கர்ப்பம் தரித்தேன். அதை கலைக்கும்படி சீமான் கட்டாயப்படுத்தினார். அதனால் கருகலைப்பு செய்தேன் என நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் விஜயலட்சுமி புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன் வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் இன்று நடிகை விஜயலட்சுமி, மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. இதனால் இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லப்படுவதால் சீமான் மீது நடவடிக்கை பாயும் என போலீஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது.