புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தண்ணீரில் அசுத்தம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள அசுத்தமான தண்ணீரை வெளியேற்றி வேறு குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் இப்பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் ஒவ்வாமை ஏதும் ஏற்படாதவகையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, காவல்துறை, வருவாய்த்துறை,மருத்துவத்துறை,ஊரக வளர்ச்சி துறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று இறையூர் கிராமத்திற்கு சென்று மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளஅரசின் அனைத்து குடிநீர் தொட்டிகளும் மூடிகள் உள்ளிட்டவைகளுடன் சரியான
முறையில் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீரை விநியோகம் செய்யவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்தஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா,
இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.