தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நமையூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (27.06.2023) மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி தலைமையில் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்
ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். உடன் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.தா.சுரேஷ் கிறிஸ்டோபர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், ஆவின் துணை பொது மேலாளர் (திருச்சி) பெ.ம.கணேசா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருணாநிதி, சிறுமத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.