ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் வரும் 12-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும். அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
