மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனை எழுதினர். இதன் ரிசல்ட் கடந்த 3ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு மற்றும் ரிசல்ட்டில் பல களறுபடிகள் நடந்ததாக குற்றம் சாட்டி, மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என பாதி்க்கப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ கவுன்சலிங் நடத்தலாம் என உத்தரவிட்டதுடன், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் போன்றவை குறித்து விளக்கமளிக்க தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.