எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று வெளியிட்டார். அதன்படி மருத்துவ படிப்பில் சேர 7.5% இடஒதுக்கீட்டில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:
1] சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேலம்) 2] தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி மங்கரை, தருமபுரி)
3] காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் முருகன் 560 மதிப்பெண்கள் (அரசு ஆதி திராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி மௌல்வாக்கம்) 4 ]திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரோஜா 544 மதிப்பெண்கள் (சண்முகா இன்டஸ்ரிஸ் அரசு மேல்நிலைப்பள்ளி திருவண்ணாமலை)
5]சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி அன்னபூரணி 538 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி உலகம்பட்டி) 6] சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 537 மதிப்பெண்கள் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேலம்)
7]அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த | மாணவி அன்னபூரணி 533 மதிப்பெண்கள் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடையார்பாளையம்) 8]பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த | மாணவன் புகழேந்தி 531 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்)
9]தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் கணேஷ் 530 மதிப்பெண்கள் (வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்) 10] திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சாம் 523 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி காசிநாயக்கன்பட்டி திருப்பத்தூர்)