மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். பார்வதி தேவி மயில் உருவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த தலம். பழமை வாய்ந்த இக்கோயிலில் கடைசியாக 2005-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. தற்போது திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் இன்று கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மாயூரநாதர் கோயிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்தார்.