நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை நெல்லை, கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் துணை மேயர் தலைமையில் நடந்தது. கூட்டத்த்ில் ஆணையர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மேயர்களின் ராஜினாமாக்களை ஏற்பது என முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேயர்கள் தேர்தல் நடத்துவது பற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர் எழுந்து மேயர் ஏன் ராஜினாமா செய்தார் ? அதற்கான காரணத்தை மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது துணை மேயர் வெற்றிச்செல்வன், அதிமுக ஆட்சியில் மேயர் செ.ம. வேலுசாமி ராஜினாமா செய்தபோது காரணம் கூறப்பட்டதா என கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.