புதுக்கோட்டை மாநகரில் இன்று காலை முதல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி வார்டு எண் 39பகுதியில் மழைநீர் தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மேயர் திலகவதி செந்தில், அந்த பகுதிக்கு கொட்டும் மழையில் சென்று நிலைமைகளை பாா்வையிட்டார்.
உடனடியாக அந்த பகுதிகளை சரி செய்து, வடிகால் வாய்க்கால் மூலம் மழைநீர் வெளியேறுவதற்கு ஜே.சி.பி.மூலம் வாய்க்கால்தூர்வாரும்பணியினை செய்ய மேயர் உத்தரவிட்டார். அதன்படி தேங்கிய தண்ணீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டது. இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் பெ. ராஜேஸ்வரி யும் உடன் சென்றார்.