திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
19 மற்றும் 21வது வார்டுகளில் பலருக்கு வயிற்று போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் குடிநீரை காய்ச்சி குடிக்காதது தான். இது குறித்து ஆணையர் மற்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியும் பொதுமக்கள் அதை கடைபிடிக்கவில்லை.
மரக்கடை பகுதியில் உள்ள நீர் ஏற்ற தொட்டியானது தற்போது பணி முடியாமல் உள்ளது. இதன் காரணமாக அப்பதிக்கு பகுதிகளுக்கு நேரடியாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டதால் சில நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றுள்ளனர். தற்போது சிலர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்
தற்போது திருச்சி மாநகராட்சியில் 65வார்டுகளுக்கு காவிரி மற்றும் கொள்ளிடம் அற்றிலிருந்து குடிநீர் விநியோகப்பட்டு வருகிறது. எங்கு நேரடியாக பம்பிங் செய்யப்பட்டதோ அந்த இடத்தில் மட்டும் தான் சுகாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்காதபடி உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. அதிகாரியிடம் அறிவுறுத்தி உள்ளேன்.திருச்சியில் மெட்ரோ ரயில் பணி எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, மத்திய அரசுக்கு இது குறித்தான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வந்தவுடன் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும். இதற்கான முயற்சிகளையும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கான பணி நேரம் அதிகப்படியாக உள்ளது என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தூய்மை பணியாளர்களுக்கு எட்டு மணி நேரம் தான் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் மழைக்காலங்களில் சில பாதிப்பு நேரங்களில் ஒரு சில மணி நேரம் கூடுதலாக பணி செய்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி சரி செய்யப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.