சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நான்கு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக தெரிவித்துள்ளனர். தொழில் மறியல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் அறிவிப்பை தொடர்ந்து இன்று வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.