மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன்(33). இவர் பிரபல காபி நிறுவனத்தின் தருமகுளம் கிளைக் கடையில் டீ மாஸ்ட்டராகப் பணியாற்றிவந்தார். வழக்கம்போல் காலயில் தருமகுளம் சென்றுவிட்டு நேற்று இரவு பைக்மூலம் ஊர் திரும்பியுள்ளார். மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாயாரைப் பார்ப்பதற்காக மயிலாடுதுறையை நோக்கி சென்றபோது மழை பெய்துள்ளது, மயிலாடுதுறை அருகே உள்ள கருங்குயில்நாதன்பேட்டை என்ற இடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம்மோதியது, இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இவர் சென்ற பைக்கில் எந்த சேதமும் இல்லை விபத்தும் சாலையின் வலது புறத்தில் நடந்துள்ளது, விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது, செம்பனார்கோவில் போலிசார் மணிகண்டன் உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தேடிவருகின்றனர். மணிகண்டனுக்குத் திருமணமாகி மனைவி சங்கீதா மற்றும் 6 வயதில் வேதாஶ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
