Skip to content

மயிலாடுதுறை.. பயிர்கள் கருகி சேதம்…டிராக்டரால் அழிக்கும் விவசாயி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டுதான் குறுவை சம்பா, தாளடி நடவு பணிகள் ,நடைபெறுவது வாடிக்கை இதுவரை 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறையத்தொடங்கியது, மழையும் குறைவானது, மயிலாடுதுறை மாவட்டத்தில் பொன்னூர், கட்டளச்சேரி, பாண்டூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், போர்வெல் மூலம் வயலில் இறைக்கப்படும் தண்ணீரில் பச்சைப்பாசி படர்ந்ததால் பயிர்கள் கருகி நாசமாகியது. பொன்னூர் கிராமத்தில் விவசாயி அகோரம் என்பவரது நிலத்தில் பச்சைப்பாசி படர்ந்ததன் காரணமாக நெற்பயிர்கள் முற்றிலும் கருகி சேதமடைந்தது. இந்த பயிர் பாதிப்பினை ஸ்;டாமின் இயக்குநர் பி.சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் சேகர் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் பேராசிரியர் ராஜப்பன் தலைமையில் பயிர் நோயியல் துறை, உழவியல் துறை, மண்ணியல் துறை விஞ்ஞானிகள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். ஒரு மாதத்துக்கும் மேலாக வளர்ந்து, பின்னர் கருகிய பயிர்களை விவசாயி அகோரம் டிராக்டர் கொண்டு அழித்தார். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவ்வாறு மழை பெய்யும்பட்சத்தில், நிலத்தடி நீர் மட்டம் உயரும், அதனால் போர்வெல் தண்ணீரில் பச்சைப்பாசி பாதிப்பு நீங்கும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் நடவுப்பணியை மேற்கொள்ள உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!