Skip to content
Home » மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

மயிலாடுதுறை…. திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…

  • by Senthil

மயிலாடுதுறையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஒன்றானதுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோயிலில் காவிரா துலா உற்சவம் கடந்த 7 -ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்று, பின்னர் காவிரி நாலுகால் மண்டபத்தில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. அவ்வகையில் தற்போது கோயிலில்

திருத்தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டமானது தொடங்கியது.

இதில் எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், ராஜ்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். திருத்தேர் நான்கு வீதிகளை சுற்றி 1 மணி அளவில் மீண்டும் நிலையை அடையும். பின்னர் மதியம் 1:30 மணி அளவில் காவிரி நாலுகால் மண்டபத்தில் கோவில்கள் சுவாமிகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. மேலும் இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!