மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகையை சிவவாத்தியங்கள் இசைக்க கோவிலுக்கு அழைத்து வந்தனர். யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்’டு மாலை அணிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை, வழங்கியும் தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது, யானை புனித நீரை துதிக்கையால் முகர்ந்து தீர்த்தமாக தெளித்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் யானைக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகள் தோறும் யானையை வரவேற்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.
