மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அபயாம்பாள் என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அப்போது யானை பராமரிக்கப்படும் இடம், யானைக்கு வழங்கப்படும் உணவுகள், யானை தினசரி முறையாக நடைபயிற்சி கூட்டிச் செல்லப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் யானை பாகன் செந்தில் ஆகியோரிடம் அவர்கள் கேட்டறிந்தனர். மேலும் யானை தற்போது பராமரிக்கப்பட்டு வரும் யானை கொட்டகை இல்லாமல், தனியாக வேறொரு இடத்தில் விஸ்தாரமாக காற்று வசதியுடன் கூடிய ஷெட் அமைக்க கோயில் நிர்வாகத்தினரிடம் ஆய்வுக் குழுவினர் அறிவுறுத்தினர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறை குழுவினர் ஆய்வு…
- by Authour
