மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு சாரல் மழைபெய்து வருகிறது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல், சங்கரன் பந்தல், பெரம்பூர் கோமல், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்தது, இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுவாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் சம்பா தாளடி விவசாயம் முடிந்த வயல்களில் பல்வேறு பகுதிகளில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகுந்த பயன்தருவதாக உள்ளது.