மயிலாடுதுறை நகராட்சியில் யானையை வரவழைத்து மேளதாளம் முழங்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தொடங்கி, தூய்மை பணியாளர்கள் வரை அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் சேர்ந்து புகையில்லா போகி மற்றும் பொங்கல் திருவிழாவில் அடுப்பில் மண்பானை வைத்து பொங்கல் பொங்கி கரும்பு வைத்து படையல் இட்டு வழிபாடு நடத்தினர். சமத்துவ பொங்கலுக்கு வந்தவர்களை வரவேற்ற மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை யானைக்கு மாலை அணிவித்து ஆசீர்வாதம் பெற்றனர். இந்த பொங்கல் விழாவில், நகராட்சி ஊழியர்கள்’ மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு. கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து கொடுத்து நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து கொண்டு சமத்துவ பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.