மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்பாரி(65) இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து வந்தார். இவருக்கும் மற்றோரு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருக்கம் தொழில்போட்டி ஏற்பட்டதில் தௌஃபிக், ஆத்தூர் ரவுடி சுமன்(40) இருவரும் கடந்த 2021ம்ஆண்டு ஜுன் 25ம் தேதி அப்துல்பாரி வீட்டிற்கு சென்று அவரது வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அப்துல்பாரி மணல்மேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொலை மிரட்டல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் வாதாடினார். இவ்வழக்கில் தவுபிக், சுமன் ஆகியோருக்கு மூன்று சட்ட பிரிவுகளுக்கும்தலா ஓராண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். தண்டனை பெற்றுள்ள சுமன் மீது 6 கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தண்டனையை ஏக காலத்தை அனுபவிக்க உத்தரிடப்பட்டுள்ளது.