சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லக்கூடிய மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வந்துள்ளது. அப்போது பயணிகள் இறங்குவதற்காக ரயில் சிறிது நேரம் நின்ற நிலையில் பின்னர் புறப்பட துவங்கியது. ரயில் எடுக்கப்பட்டதை உணர்ந்த நபர் ஒருவர் ரயில் புறப்பட துவங்கிய போது இறங்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி விழுந்துள்ளார். மேலும் தண்டவாளத்தின் உள்ளே விழ முயன்ற நபரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை முதல் நிலை காவலர் புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். அதனைத் தொடர்ந்து பயணியை காப்பாற்றும் காவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் காவலருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.