மயிலாடுதுறையில் நேற்று முன்னிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது இந்நேரத்தில் சென்னையில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே உள்ள சேத்திரபாலபுரத்திற்கு டேங்கர் லாரி ஒன்று சென்றது.
சமையல் எரிவாயு நிரப்பும் ஆலையில் எரிவாயுவை இறக்கிவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக டேங்கர் லாரி மயிலாடுதுறை வழியாக சென்றது.
பலத்த மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில் மயிலாடுதுறை காமராஜர் வீதியில் உள்ள சாலை பிரிப்பான்
சுவர் மீது மோதி டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.
இதில் டேங்கர் லாரியின் எஞ்சின் பகுதி முற்றிலும் நசுங்கி சேதமாகியதால் லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. சாலையின் நடுவே லாரி விடிய விடிய நின்றதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.