மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கிய நபரை காப்பாற்ற சென்ற தொழிலாளி பலி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கை நல்லூரை அடுத்த வேலங்குடியில் வசித்து வருபவர் வெங்கட்ராஜன் (55). கூரை வீட்டில் வசித்து வரும் இவர் அருகாமையில் வீடு கட்டி வருகிறார். வீட்டில் ஆசாரி வேலை நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக கூரை வீடு ஒழுகியதால் கூரை வீட்டின் மேல் வெங்கட்ராஜன் இன்று காலை தார்ப்பாய் போட்டுள்ளார். அப்போது இடையூறாக இருந்த கேபிள் ஒயரை அகற்றிய போது கேபிள் ஒயர் உயர் மின்னழுத்த கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி வெங்கட்ராஜன் உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கட்டிடப் பணியில் இருந்த திருவாரூர்
(பிரபு உயிரிழந்தவர்)
மாவட்டம் போலக்குடியைச் சேர்ந்த ஆசாரி பிரபு வெங்கட்ராஜனின், மனைவி வசந்தி மகள் ரம்யா ஆகியோர் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இதில் மூவருக்கும் மின்சாரம் தாக்கி உள்ளது. பிரபு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் தலையில் அடிபட்டு உள்ளது. படுகாயம் அடைந்த நால்வரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்தவர்கள் கொண்டு வந்து சேர்த்தனர். இதில் பிரபு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததன் பெயரில் பிரபு உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த வெங்கட்ராஜன் மற்றும் மனைவி வசந்தி (50) மகள் ரம்யா(28) ஆகிய மூவரும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பம் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.