மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில்
குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி தொடங்கி வைத்தார். 40 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக, மாணவ, மாணவிகள் அணிவகுத்து ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்தனர். பின்னர், 100 மீட்டர் 400 மீட்டர், ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவர்களுக்கு என மூன்று பிரிவுகளில் இந்த போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.