விடுதலை ராஜேந்திரனின் நூல்களை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளரும் மயிலாடுதுறை மண்ணின் மைந்தருமான விடுதலை இராசேந்திரன் நூல்களை நாட்டுடைமையாக்கி அதற்குரிய உரிமைத்தொகையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். வழங்கினார். இதற்கு வரவேற்பு தெரிவித்து திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மாவட்ட செயலாளர் மகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இக்கட்சியினர் மயிலாடுதுறை கேணிக்கரையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழக நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.