மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தொடரும் ஆணவக் கொலைகளை தடுத்திட தனிச் சட்டம் இயற்ற கோரியும், கிருஷ்ணகிரியில் பட்டியல் இனப்பெண்ணை திருமணம் செய்ததற்காக தந்தையே தன் மகனை படுகொலை செய்ததை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீதொண்டு வார விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை தீயணைப்புத் துறையில் துவங்கிய பேரணியை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் விபத்து எதிர்பாராத நிகழ்வு, பாதுகாப்பு என்பது வருமுன் காக்கும் செயல், சமையல் செய்யும்போது பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும், சமையல் வாயு சிலிண்டர்களை கவனமாக கையாள வேண்டும், என்பதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்திச் சென்றனர் ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தையடைந்தது.படவிளக்கம்மயிலாடுதுறையில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.