மயிலாடுதுறை அடுத்த பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றியவர் திருநாவுக்கரசு(34), திருமணமானவர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் கள்ளக்குறிச்சியில் வசிக்கிறார்கள். திருநாவுக்கரசு மட்டும் பெரம்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
காவலர் குடியிருப்பு பகுதியில் 16 வயது சிறுமி ஆடு மேய்த்து வந்தார். அந்த சிறுமியிடம் நைசாச பேச்சுக்கொடுத்த திருநாவுக்கரசு கடந்த 8ம் தேதி அந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று மது கொடுத்துள்ளார். அந்த சிறுமி மதுவை குடித்ததும் போதையில் மயங்கி உள்ளார். அப்போது அவர் சிறுமியின் உடைகளை களைந்து பலாத்காரம் செய்து உள்ளார்.
போதை தெளிந்து எழுந்த சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து போலீஸ்காரரிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அனுப்பி விட்டார். இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. இதற்கிடையே அந்த சிறுமியின் குடும்பத்தாரை சமாதானப்படுத்த முயற்சிகள் நடந்தது.
இதற்கிடையே இது குறித்து சென்னையில்உ ள்ள சைல்டு லைன் 1098ல் புகார் செய்து விட்டனர். அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன் பேரில் குழந்தைகள் நல அதிகாரி பெரம்பூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு போலீஸ்காரர் தி்ருநாவுக்கரசை போக்சோவில் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, நாகை கிளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் போலீஸ்காரர் திருநாவுக்கரசுவை, மாவட்ட எஸ்.பி. மீனா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர் திருநாவுக்கரசு, கடந்த ஆண்டு நல்லாத்தூர் செக்போஸ்ட்டில் பணியில் இருந்தபோது போதையில்ந ன்றாக தூங்கி விட்டார். அப்போது அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்ட எஸ்.பி. நிஷா, போலீஸ்காரர் திருநாவுக்கரசுவை சஸ்பெண்ட் செய்தார். அந்த சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து விடுபட்டு பணியில் சேர்ந்த சில மாதங்களில் மீண்டும் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.