மயிலாடுதுறை மாவட்டத்தல் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அந்தந்த துறை அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அகர கீரங்குடி ஊராட்சியில் நீர்வளத் துறையின் சார்பில் 21 லட்சம் மதிப்பீட்டில் ஹரிஜன் வாய்க்கால் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி கூறியதாவது :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 சதவீதம் தூர்வாரும் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளதாகவும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிவடையும் என தெரிவித்தார்.மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மருத்துவ உபகரணங்களை கையாளும் டெக்னீசியன்கள் பற்றாக்குறையாக உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அடுத்ததாக மருத்துவமனையில் ஆய்வு செய்ய உள்ளோம் அங்கு உள்ள குறைபாடுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்படும் என்றார். கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் செயல்படுவது குறித்து புகார் வந்துள்ளதாகவும் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.