தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பின் பொறுப்பேற்ற திமுக அரசு மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காக ரூ.114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் ஏழு மாடி கட்டிடமாக பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து 655.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்களுக்கான
அடிக்கல் நாட்டு விழா, நிறைவு செய்யப்பட்ட கட்டிடங்களுக்கான திறப்பு விழா, காணொளி காட்சி வாயிலாகவும் மயிலாடுதுறை நாகை திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு 12653 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிககளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி ஐ ஜி கார்த்திகேயன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்ட 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 8 ஏடிஎஸ்பிக்கள், மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் திருச்சி, புதுக்கோட்டை கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 1745 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு போலீசார் அனுப்பி வருகின்றனர். மயிலாடுதுறை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பத்தரை மணி அளவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.