பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்வு காரணமாக நள்ளிரவு உயிரிழந்தார். நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களும் பாஜக நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வகையில் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஹீராபென் மோடி
மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஹீராபென் உருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
