ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதல் தமிழர் நீதிபதியாக பணியாற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழில் முதல் சரித்திர நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் உட்பட பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டவர்.1856ஆம் ஆண்டு தரங்கம்பாடி நீதிமன்றத்தில் முதன் முதலாக பதவி ஏற்று சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் 13ஆண்டுகள் பணியாற்றியவர். பல்வேறு நூல்களை எழுதியவர்.
மயிலாடுதுறையை மிகவும் நேசித்ததால் தம்மை மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைத்தவர்.
இவர் திருச்சி அருகே குளத்தூரில் 11 அக்டோபர் 1826 ஆம் ஆண்டு பிறந்தார். தமது இறுதி பயணத்தில் தன் உடலை மயிலாடுதுறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியவர். அவரது 197 பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் தலைவர் பவுல்ராஜ் தலைமை வகித்தார் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.