மயிலாடுதுறை மாவட்டம், பழையகூடலூர் கிராமத்தில், ஜி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின், தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாகவும், ஐக்கிய நாடுகள் சபை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாதிரி ஐ.நா. சபைக்கூட்டம் நடைபெற்றது. இதன் துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர், மகாபாரதி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அம்பிகாபதி, மாவட்ட தனியார் பள்ளிக் கல்வி அலுவலர் நிர்மலாராணி ,உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர். இதில், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுக்காக்களைச் சேர்ந்த 22 பள்ளிகளிலிருந்து 160 மாணவ-மாணவிகள் மற்றும் 30 ஆசிரியர்கள், 30 நாடுகளின் பிரதிநிதிகளைப் போல் கலந்துகொண்டு பேசினர்.