மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் 1965ம் ஆண்டிலிருந்து இயங்கிவைந்த பஞ்சாலை நட்டத்தில் இயங்கி 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது, 34 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் பல ஆண்டுகளாக உள்ளது. கலைஞர் நூற்றாண்டு துவக்கவிழாவை முன்னிட்டு மணல்மேடு பஞ்சாலை இடத்தில் தொழில் பூங்கா அமைக்கவேண்டும் என மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, துணிநூல்துறை ஆணையர் டாக்டர் வள்ளலார், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கரூரை சேர்ந்த டெக்ஸ்டைல்துறை பொறியாளர் மற்றும் மண்டல துணை இயக்குனர்கள் உட்பட அதிகாரிகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். இதில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி எம்எல்ஏக்கள், மேலும் முன்னாள் எம்எஎல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கைத்தறி மற்றும் ஆயத்த ஆடை, சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு போன்றவை அமைக்க ஆலோசிக்கப்பட்டது, இதுகுறித்து விரிவான அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்து அதன்பிறகு முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.