Skip to content
Home » மயிலாடுதுறை…. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி….

மயிலாடுதுறை…. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி….

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முதல்வர் திருச்சி மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி மூலம் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். செம்பனார்கோவில் அண்ணா திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 652 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.7.69 கோடி பெருங்கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் லலிதா,
பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன், சீர்காழி தொகுதி எம்எல்ஏ பன்னிர்செல்வம், ஆகியோர் கடன் உதவிகளை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 6592 எண்ணிக்கையிலான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு கடந்த 2021 – 2022-ஆம் நிதியாண்டியில் ரூ. 301கோடி அளவிலான கடன் உதவி வழங்கப்பட்டது.
நடப்பு 2022-2023 நிதியாண்டியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.500 கோடி இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2022 நவம்பர் மாதம் முடிய ரூ. 266.85 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு பிரதிநிதிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!