கடந்த ஆண்டு மயிலாடுதுறை புதிய பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்த எடுத்துக்கட்டி சாத்தனுரை சேர்ந்த கண்ணன்(45) என்பவரிடம் எங்களது வீட்டில் பள்ளம் தோண்டும்போது பூமியிலிருந்து தங்கத்தாலான குண்டுமணி மாலைகளான புதையல் கிடைத்தது. நாங்கள் கஷ்ட நிலையில் உள்ளோம். எப்படியாவது இதை குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெஞ்சியுள்ளனர். இதை எப்படி நாங்கள் நம்புவது என்று கூறிய கணேசனிடம் 3 பேரும் சேர்ந்துகொண்டு இந்த மாலையிலிருந்து 2 தங்கக்குண்டுகளை கழட்டி கொடுத்து இதை பரிசோதியுங்கள் என்றனர். இதை நம்பி நகை வியாபாரிடம் பரிசோதனை செய்துள்ளார்.
அது அசல் தங்கம் என தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவர் ஊருக்குச் சென்று ரூ.5 லட்சத்தைப் புரட்டிகொண்டு வந்து மயிலாடுதுறையில் அந்த 3 மர்ம நபர்களிடம் அளித்து 3 கிலோ குண்டுமணி மாலையை அளித்துச் சென்றனர். இதே போல் 10க்கும்மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாயை சுருட்டிகொண்டு கம்பிநீட்டிள்ளனர். வீட்டிற்கு வாங்கிச் சென்று அவற்றை பரிசோதித்தபோது அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இப்புகாரை தொடர்ந்து போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் மயிலாடுதுறையில் தலைகாட்ட ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களை போல் வேடமணிந்து அந்த மர்ம நபர்களிடம் குண்டுமணி மாலை வாங்குவது போல் நடித்து கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் விசாரணையில் கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த தேவூ (28) , ராஜிவ் (48) ஆகிய இருவர் என தெரிய வந்தது, அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த பல குண்டுமணி மாலைகளைக் கைப்பற்றினர். விசாரணையில் இவர்கள் இந்த ஏமாற்றுத் தொழிலை கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வெற்றிகரமாக செய்ததாகவும் வருமானத்தில் வீடுகட்டியுள்ளனர். முதன்முதலாக மயிலாடுதுறையில்தான் சிக்கிக் கொண்டதாக கூறினர். போலியான குண்டுமணி மாலைகளை தங்கம் எனக்கூறி பொதுமக்களை நம்ப வைத்து வேறு மாநிலத்தவர்கள் ஏமாற்றிய இந்த நூதன மோசடி சம்பவம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.