மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3ம் திருநாளாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் குமரக்கட்டளை மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு தீபாராதனை வீதி உலா காட்சி நடைபெற்றது. இதேபோல் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தின் அம்பிகா சமேத சந்திரசேகரர் சுவாமி விநாயகர், சண்டிகேஸ்வரருடன் எழுந்தருளி மகா தீபாராதனை ப வீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.