Skip to content

மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

மயிலாடுதுறையில் உள்ள சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) பயிற்சி மையத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் கபடி போன்றவற்றிற்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மற்ற போட்டிகளுக்கான பயிற்சி வீரர்கள் தேர்வு முடிவுற்ற நிலையில் கபடி வீரர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. ஆண்கள் 13, பெண்கள் 13 என 26 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் இதில் ஏற்கனவே 6 பேர் இருப்பதால் தலா 10 பேர் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் 13 வயது முதல் 18 வயதுவரை உள்ளவர்கள் கலந்துகொண்டனர், ஆண்கள் 356ம் பெண்கள் 54 பேரும் பங்கேற்றனர். இதில் 20 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தேர்வின்பொழுது மாநில அமச்சூர் கபடிக்கழக தலைவர் சோலைராஜா கலந்துகொண்டு இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார், வடமாநிலங்களில் 3 இடங்களில் மட்டும் கபடி வீரர்களுக்கு தேசிய சிறப்பு மைய சலுகை உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டு மையங்களில்

இந்த சலுகைகிடையாது, தமிழகத்தில் 2 லட்சம்பேர் கபடி விளையாடிவருகின்றனர். ஆனால் தமிழகத்தில் சேலம், சென்னை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள சாய் மையங்களில் சென்னை மற்றும் மயிலாடுதுறையில் மட்டும் கபடி பயிற்சி உள்ளது. அதுவும் மயிலாடுதுறையில் மட்டும்தான் ஆண், பெண் வீரகள் பயிற்சி மையம் உள்ளது.

மயிலாடுதுறை சாய் மையத்திற்கு கபடிக்கான தேசிய சிறப்பு மைய சலுகை அளித்தால் கபடி வீரர்களின் உணவுப்படி உயரும் விமான பயணம் போன்ற இந்திய தேசிய வீரர்களுக்கான சலுகை அனைத்தும் கிடைக்கும், ஆகவே ஒன்றிய அரசு மயிலாடுதுறை மையத்திற்கு தேசிய சிறப்பு மைய சலுகை அளிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார், ஒன்றிய அரசின் கவனத்தை திருப்ப விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பேட்டியின்போது மாவட்ட கபடிக்கழக தலைவர் ரஜினி, சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!