Skip to content
Home » குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் குதிரை மற்றும் மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய திருவிழாவாக காணும் பொங்கலன்று ரேக்ளா பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கல் தினமான இன்று 45 ஆம்

 

ஆண்டுக்கான பந்தயம்
திருக்கடையூர் முதல் தரங்கம்பாடி வரை 10 கி.மீ நடை பெறும் குதிரை, மாடு வண்டிகளுக்கான எல்கை (ரேக்ளா) பந்தயத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாடு மற்றும் குதிரை வண்டிகளுடன் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டிகளுக்கான போட்டிகள் தொடங்கியது. போட்டியினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
மாட்டு வண்டிகளுக்கான போட்டியில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு என மூன்று பிரிவுகளும், அதே போல் குதிரை வண்டிகளுக்கான கரிச்சான் குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை ஆகிய மூன்று பிரிவுகளாகவும் மாலை வரை ரேக்ளா பந்தையங்கள் நடைபெருகிறது. வெற்றி பெரும் முதல் மூன்று மாடு, குதிரை மற்றும் வீரர்களுக்கு ரொக்க பரிசுகள், சான்றிதழ்கள், பரிசு கோப்பைகளும் வழங்கப்படும். பாரம்பரியம் மிக்க திருக்கடையூர் ரேக்ளா பந்தயத்தை காண்பதற்காண பல்வேறு மாவட்டங்களிலிருந்து
ஆயிரகணக்கான பார்வையாளர்கள் 5 கி.மீ தூரம் சாலையில் இருபுறமும் நின்று கண்டுகளித்து வருகின்றர்.

பந்யத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்காணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.