மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுகா பகுதிகளிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கடுமையாக பனிப்பொழிவு காணப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளாக இன்றும் இரவு முதலே அதிகமான குளிர் நிலவிவந்த நிலையில் அதிகாலையில் தொடங்கிய பனிப்பொழிவு 8 மணி தாண்டியும் மழை பொழிவு போல் பெய்து வருகிறது. குறைந்த தூரத்தில் இருக்கின்ற பொருள் கூட தெரியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டுபடியே குறைவான வேகத்தில்
வாகனங்களை இயக்கி செல்கின்றனர். மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிக்கு செல்லோரின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையில் சாய்ந்த சம்பா சாகுபடி தாளடி நெற்பயிர்கள் மற்றும் இளம் நெற்பயிர்களில் மழை, பனி வெயில் என மாறி மாறி நிலவிவருவதால் புகையான் தாக்க அதிக வாய்ப்பு என விவசாயிகள் அச்சத்தில் இருப்பதுடன் நெற்பயிர்கள் காயாத நிலையில் அறுவடை செய்ய முடியாது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.