மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடந்த இரண்டு நாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த இரண்டு நாளில் 13 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியிருந்த நிலையில் மாவட்டத்தில் வல்லம், முக்குறும்பூர், பரசலூர், குளிச்சார், ராதா நல்லூர், கிடங்கல், கேசிங்கன் உள்ளிட்ட மயிலாடுதுறை தரங்கம்பாடி ஆகிய தாலுகாக்கள் உட்பட மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குறைந்த நாள் பயிர் மற்றும் பள்ளப்பகுதிகளில் 8000 ஏக்கருக்கும்
மேல் விவசாய நிலங்களில் தண்ணீர் வடிய வழியின்றி நீரால் சூழப்பட்டது. ஒரு சில பகுதிகளில் வடிகால் வாய்க்கால் தூர்வாராததாலும் சிலர் ஆக்கிரமித்து இருப்பதாலும் தண்ணீர் வடிய வழியின்றி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை இல்லாத நிலையில் விவசாய நிலங்களில் தண்ணீர் வடிய துவங்கியுள்ளது. 8000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரால் சூழப்பட்ட நிலையில் விவசாய நிலங்களில் இருந்து மழைநீர் வடிந்து வருகிறது.