தனித்துறைகளாக இயங்கி வந்த ஓய்வூதிய இயக்ககம், அரசு தரவு மையம், மற்றும் சிறுசேமிப்பு இயக்குநரகம் ஆகியவை மறுசீரமைப்பு என்ற பெயரில் கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளதைக்கண்டித்து
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தமிழக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மாநில பொது செயலாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினர்,
அவர் கூறுகையில்,
இந்த ஒருங்கிணைப்பால் பயன் பெறப் போவது அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, ஓய்வூதியர்களோ அல்ல. இனி இந்த பணிகளெல்லாம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களே பயன்பெறப் போகின்றன. இந்த அலுவலகங்களெல்லாம் தனிதனித் துறைகளாக இயங்கி வந்தபோதே தீர்க்க வேண்டிய நிலுவைகள் ஏராளம். இந்த நிலையில் ஏற்கனவே போதிய பணியிடங்களின்றி தங்களது பணிகளை தனியார் நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல எனவே மேற்கண்ட அரசாணையினை ரத்து செய்திட வேண்டும் தமிழக அரசின் ஓய்வூதியர்கள் விரோத போக்கினை கைவிட வேண்டும் அரசாணை எண் 343 ஐ ரத்து செய்ய வேண்டும் என்றார். தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.