மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு முன்பட்ட குறுவைப் பருவத்திற்கு 34,813 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 250 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 119 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டடத்திலும், மற்றவை திறந்த வெளி நிலையங்களாகவும் செயல்படும். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை குத்தாலம் அருகே மேக்கிரிமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர், திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவது தெரிய வந்தால் கொள்முதல் நிலைய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், வெளி மாவட்டங்களில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டால் அதை கண்டறிய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, வியாபாரிகள் நெல் கொண்டு வந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மயிலாடுதுறை…. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…
- by Authour
