கடந்த 2021-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் வைத்து மரியாதை செலுத்துவது தொடர்பாக இரண்டு பிரிவினர் களிடையே
கலவரம் ஏற்பட்டது. அதன் பிறகு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக அரசு தரப்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று இந்தாண்டும் மயிலாடுதுறை ஏடிஎஸ்பி வீடு வேணுகோபால் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பட்டவர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக டாக்டர் அம்பேத்கர் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அப்படத்திற்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் யூரேகா மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அதன் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்த 20 நபர்கள் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.