Skip to content
Home » மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை….

மயிலாடுதுறை அருகே அரசு சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை….

2021 ஆம் ஆண்டு முதல் இரு சமூகத்தினரிடையே தொடர் மோதல் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
அரசு தரப்பில் 10 பேர் மற்றும் கிராம மக்களின் இருதரப்பிலும் தலா 20 பேர் என மொத்தம் 50 பேர் பங்கேற்று மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் பட்டவர்த்தியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ்குமார் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியினர் பங்கேற்று அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். மேலும் இரண்டு முறை 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலை மாறியது . 500க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!