மயிலாடுதுறை அருகே ஆற்காடு கிராமத்தை சேர்ந்த லோகநாதன்(65) விவசாயி இவர் நேற்று வயலுக்கு சென்றவர் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது இருந்த மின்கசிவால் மின்சாரம் தாக்கி லோகநாதன் மின்மோட்டார் மீதே விழுந்து கிடந்தார்,.. அந்த வழியாக வயலில் சென்ற கிராம மக்கள் பார்த்து மின்சாரத்தை துண்டித்து லோகநாதனை பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. . மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்துபோன விவசாயிக்கு மனைவி, இரண்டு மகன் மற்றும 2 மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
